
நன்றி : துக்ளக் அட்டைப்படம்
All tamil news, tamil jokes, sardar jokes, sms, kadi jokes available here.
இந்திய அரசின் 2007க்கான தேசிய சினிமா விருதுகளை அறிவித்திருக்கிறீர்கள். எல்லா விருதுகளும் எப்போதும் சர்ச்சைக்குரியவைதான். பிரகாஷ் ராஜ் ஒரு திறமையான நடிகர் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. விருதுகள் பெறுவதற்கான தகுதி உடையவர்தான் அவர். ஆனால் வருட அடிப்படையில் விருது தரும்போது அந்த வருடம் வந்த படங்களில் சிறந்த படம், அவற்றில் இருந்த நடிகர்களில் சிறந்த நடிகர் என்பதுதான் அடிப்படையாக இருக்க வேண்டும் அல்லவா ?
அப்படிப் பார்த்தால் காஞ்சிவரம் படமும் சரி, பிரகாஷ்ராஜும் சரி, சிறந்த படம், சிறந்த நடிகர் விருதுகளுக்குரியவர்களாக ஒரு ரசிகன் என்ற முறையில் எனக்கு உடன்பாடில்லை. காஞ்சிவரம் படம் ஒரு செயற்கையான படம். தொழில்நுட்ப நேர்த்தியால் செயற்கையான கதையை மறைக்கிற பாவனைப் படம். நேர்த்தி இருக்கிறது. ஆன்மா இல்லை.
நியாயப்படி சிறந்த படம் விருது ‘தாரே சமீன் பர்’ படத்துக்குத்தான் தரப்பட்டிருக்க வேண்டும். கற்றல் குறைபாடுள்ள சிறுவனின் வாழ்க்கையைப் பற்றி நேர்மையோடும் அக்கறையோடும் எடுக்கப்பட்ட படம் அது என்பது படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும். அதே போல சிறந்த நடிகர் விருது தாரே சமீன் பர் படத்தில் நடித்த சிறுவனான தர்ஷீல் சஃபாரிக்குத்தான் தரப்படவேண்டும். சிறந்த நடிகர் விருதை குழந்தைகளுக்குத் தரக்கூடாது என்று விதி இருக்கிறதா என்ன ?
தாரே சமீன் பர் படம் பிலிம்பேர் பத்திரிகையின் விருதுகளுக்கு நியமனத் தேர்வான சமயத்தில் தர்ஷீல் தன்னை குழந்தை நடிகர் பிரிவில் பரிசீலிப்பதற்கு சம்மதிக்கவில்லை. அந்தப்படத்தின் கதாநாயகன் தான்தான் என்ற முறையில் சிறந்த நடிகர் பிரிவிலேயே தன்னை பரிசீலிக்க வேண்டும் என்பது தர்ஷீலீன் நியாயமான வாதம்.
தாரே சமீன் பர் படத்துக்குச் சிறந்த குடும்ப நலப்படம் என்ற பிரிவில் விருதளித்திருப்பது கொடுமை.
மாநில அளவில் சிறந்த படம் என்று தமிழில் ‘பெரியார்’ படத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்களே, இது சுத்தமான அரசியல். பெரியாரை கவுரவிப்பதற்கான வழி இதுவல்ல. பெரியாரை சரியாக சித்திரிக்கத் தவறிய படம் அது. 2007ல் தமிழில் வந்த படங்களில், பெரியாரை விட சிறந்த படங்கள் என்று, மொழி, ஒன்பது ரூபாய் நோட்டு, எவனோ ஒருவன், பருத்தி வீரன், பள்ளிக் கூடம் என்று குறைந்தது ஐந்து படங்களைப் பட்டியலிடமுடியும்.
சாகித்ய அகாதமி முதல் சினிமா விருதுகள் வரை டெல்லியிலிருந்து வரும் எந்த விருதும், லாபியிங்கெல்லாம் இல்லாமல் நேர்மையாக மொழி, வட்டாரம் கடந்து தேர்வு செய்வது எப்போது நடக்கும் ?
நன்றி : ஞானி.net
தமிழ் நாட்டில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் செய்த நீங்கள் ஒவ்வொரு சமாதியாக ஒவ்வொரு சிலையாகப் போய் மாலை போடும் சடங்குகளையெல்லாம் தவிர்த்துவிட்டது நல்ல விஷயம். அதே போல உங்கள் கட்சித் தலைவர் சோனியா காந்தி சென்னை வந்தால் சத்தியமூர்த்தி பவனுக்குப் போகாமல் கலைஞர் வீட்டுக்கோ அறிவாலயத்துக்கோ மட்டும் போகும் பழக்கம் உடையவர். நீங்கள் அதையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியின் கடந்த 62 வருட வரலாற்றிலேயே இல்லாத முறையில் இளைஞர் காங்கிரசுக்கு உட்கட்சித் தேர்தல் நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் புரட்சியில் நீங்கள் ஈடுபட்டிருக்கிறீர்கள். தேசிய நதிகள் இணைப்பை நீங்கள் ஆதரிக்கவில்லை என்று வெளிப்படையாகக் கருத்து தெரிவித்தது என்னைப் போன்ற சுற்றுச் சூழல் அக்கறையாளர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியைத் தந்தது.
இன்னும் சில மாதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுடன் ஒரு இளைஞர் காங்கிரஸ் அமைப்பை ஏற்படுத்தியிருப்பீர்கள். ஆனால் அந்த அமைப்பு யாரோடு சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று யோசித்தீர்களா ?
கடைசி கணக்குப்படி தமிழ்நாட்டில் மொத்தம் 12 கோஷ்டிகள் காங்கிரசுக்குள் இருக்கின்றன.அவற்றை வழிநடத்துகிற எல்லாரும் பல்வேறு சமயங்களில் நியமனம் மூலமே கட்சிப் பதவிக்கு வந்தவர்கள்.
அவர்களுடன் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் ஒன்றாக வேலை செய்யமுடியும் ? உற்சாகமாக வேலை செய்யத்தொடங்கும் அவர்கள் ஒவ்வொருவரும், சில தினங்களிலேயே விரக்தியை நோக்கி உங்கள் கட்சியின் பெரிசுகளால் விரட்டி அடிக்கப்படுவார்கள் என்பதுதான் நடைமுறை நிஜம்.
தவிர உங்கள் கட்சிக்குள் இருக்கும் பல கோஷ்டிகளுக்கு சோனியாவைத் தவிர வேறு தலைவர்களும் உண்டு. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் தலைமையைப் பின்பற்றும் அவர்களை எப்படி உங்கள் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் சமாளிக்கப் போகிறார்கள் ? அதை சமாளிக்காமல் எப்படி அடுத்த தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டு தி.மு.க, அ.தி.மு.க இருவரையும் வீழ்த்தும் கனவை நனவாக்கப் போகிறீர்கள் ?
நன்றி : ஞானி.net