Friday, August 21, 2009

கார்ட்டூன் - 22-08-09

கார்ட்டூன் : தினமணி
கார்ட்டூன் : தினமலர்


Thursday, August 20, 2009

கார்ட்டூன் - 15-08-09

தினமணி : கார்ட்டூன் - சுதந்திர தினம்

நன்றி : தினமணி.com

தமிழ் கார்ட்டூன் - 21-08-09

தினமணி : பன்றி காய்ச்சலுக்கு பயப்படும் மந்திரி




தினமலர் : அரசியல் - ராஜா, ஜஸ்வந்த் சிங்




All copyrights to their owners.

oru-tamilan.blogspot.com : தமிழக வேளாண் தொழில்ஆலோசகர் ஒழுங்காற்றுச் சட்டம்

சொன்னால் வெட்கக்கேடு, சொல்லாட்டி மானக்கேடு' என்கிற கதையாக, தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு, மறுநாளே எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டிருக்கிறது தமிழக வேளாண் தொழில்ஆலோசகர் ஒழுங்காற்றுச் சட்டம் என்கிற மசோதா. இந்தச் சட்டத்தின் அடிப்படையான ஒரேயொரு விஷயம் ""விவசாயிகளுக்கு வேளாண்மைத் தொழில்நுட்பத்தை சொல்லித் தருவோர் பதிவுபெற்ற வேளாண் பட்டதாரிகளாக இருக்க வேண்டும்'' என்பதுதான். இதை மீறினால் சிறை அல்லது ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும். இச் சட்டத்தில் இயற்கை, மற்றும் பாரம்பரிய விவசாயத்துக்கு விலக்கு அளிக்கப்படவில்லை என்பதுதான் அதிர்ச்சியான விஷயம். புதிதாக ஒரு சட்டம் கொண்டுவரப்படுகிறது என்றால், ஒன்று அது யாருக்கோ லாபம் சேர்ப்பதாக இருக்கலாம். அல்லது நாட்டில் பொதுமக்கள் அல்லது குறிப்பிட்ட துறையினர் பாதிக்கப்பட்டு பேரிழப்பு நேர்ந்திருந்தால், மறுபடியும் அப்படி நடக்கக்கூடாது என்பதற்காகச் சட்டம் இயற்றப்பட்டிருக்கலாம். சரி, இத்தகைய சட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன? தமிழ்நாட்டில் போலி வேளாண் ஆலோசகர்கள் பெருகிப்போய், விவசாயிகள் ஏமாற்றப்பட்டு, நஷ்டமடைந்து, தற்கொலைச் சம்பவங்கள் நடந்துவிட்டதா? அப்படியேதும் நடைபெற்றுவிடவில்லையே! ஏன் கொண்டுவந்தீர்கள் என்று நம் சட்டப்பேரவை உறுப்பினர்களும், எதிர்க்கட்சிகளும்கூட கேட்கவில்லை. அமைச்சரும் இதற்கான காரணத்தை விளக்கவில்லை. மருத்துவத் துறையில் பட்டம்பெற்று பதிவு செய்துகொண்டவர்கள் மட்டுமே மருத்துவத் தொழில்புரிய வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டபோது, பல தலைமுறைகளாக சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற இந்திய மருத்துவம் அளித்துவந்தோருக்கு, அவர்கள் பரம்பரையாகச் செய்து வருகிறவர்கள் என்பதை நிரூபித்து பதிவு செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டது. தற்போது சித்தா, யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவத்துக்கு தனித்தனியாக கல்லூரிகள் வந்துவிட்டன. மாணவர்களும் அதிக அளவில் சேர்கிறார்கள். இப்போது பரம்பரை வைத்தியர்கள் என்பதை நீக்கினாலும், இந்த இந்திய மருத்துவ அறிவைக் கொண்டு செல்ல ஆட்கள் வந்தாகிவிட்டது. ஆனால், தமிழகத்தின் பாரம்பரிய, இயற்கை வேளாண்மைக்கு அத்தகைய நிலைமை இல்லை. பாடத்திட்டத்தில் ஒரு சிறு அறிமுகப் பாடமாக இவை இருக்கக்கூடுமே தவிர, தமிழகப் பல்கலைக்கழகங்களில் பாரம்பரிய விவசாயம், இயற்கை வேளாண்மை குறித்த தனியான சிறப்புப் பட்டப்படிப்புகள் இல்லை. தற்போது தமிழ்நாட்டில் பாரம்பரிய விவசாயம் அறிந்த விவசாயிகளின் தலைமுறை முடிந்துபோனது. இப்போது இருக்கும் விவசாயிகள் பசுமைப் புரட்சியின் ரசாயன விவசாயத்துக்குப் பழகியவர்கள். இந்த நிலையில் பாரம்பரிய விவசாயம் மற்றும் இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கும் பணியில் சில விவசாய அமைப்புகள் குழுக்கள் ஆங்காங்கே ஈடுபட்டு வருகின்றன. இந்தப் பாரம்பரிய அறிவு இப்போதுதான் பரவலாகப் பேசப்படும் நிலை உருவாகியுள்ளது. பஞ்சகவ்யா, பூச்சிவிரட்டி, மண்புழு உரம் என்பதெல்லாம் இப்போதுதான் மீண்டும் கையாளப்படுகிறது. இந்நிலையில் இச்சட்டம் வந்திருப்பது தமிழகப் பாரம்பரிய விவசாயத்தை அழிக்கத்தான் உதவுமே தவிர, காப்பாற்றாது. தமிழக அரசு தனது தவறைத் திருத்த விரும்பினால் ஒன்றைச் செய்ய வேண்டும். அதாவது, முன்பு மருத்துவத் துறையில் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பார்த்த பாரம்பரிய மருத்துவர்களையும் பதிவு செய்துகொண்டு மருத்துவம் நடத்த அனுமதித்ததைப் போல, தற்போது இயற்கை வேளாண்மை, பாரம்பரிய வேளாண்மையில் கருத்தரங்கம், செயல்விளக்கம், பண்ணைவிளக்கம் நடத்துபவர்களையும் உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும். தமிழகப் பல்கலைக்கழகங்களில் இதற்கான தனிச்சிறப்பு பட்டப்படிப்புகளில் போதுமான எண்ணிக்கையில் மாணவர்கள் பட்டம் பெற்று வந்தபின்னர், இந்த நடைமுறையில் தேவைப்பட்டால் திருத்தம் செய்துகொள்ளலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு, மலேசிய அமைப்புடன் இணைந்து, இயற்கை வேளாண் வல்லுநர் நம்மாழ்வார் ஒரு வேளாண் பல்கலைக்கழகம் தொடங்கப்போவதாக அறிவித்தார். இதில் பயில அடிப்படைத் தகுதி அவர் விவசாயியாக இருந்தால் போதும். அத்தகைய பல்கலைக்கழகம் செயல்பாட்டில் இருக்குமேயானால், அது அரசு அங்கீகாரம் பெற்றிருக்காவிட்டாலும்கூட, அதில் தொடர்புடையவர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். இந்த விதித் தளர்வுகள்தான் தமிழகப் பாரம்பரிய வேளாண்மையை இந்தத் தமிழ் மண்ணில் நீடிக்கச் செய்யும். மண்ணை வீணாக்கும் முயற்சிக்கும், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சிக்கும் ஊக்கமளிக்கும் இப்படிப்பட்ட சட்டத்தை எந்தவித விவாதமும் இல்லாமல் சட்டப்பேரவை நிறைவேற்றி இருப்பதற்கு நமது மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒரு விழா எடுத்தால் தகும்!

நன்றி : தினமணி.com

Wednesday, August 19, 2009

ஆதவன் ப்ரோமோ சாங்

Aadhavan (2009)
Promo video song


Cast: surya, nayantara, Rahul Dev, Saroja Devi,
Vadivelu and others

Directed by K. S. Ravikumar
Produced by Udhayanidhi Stalin
Written by Ramesh Khanna
Music by Harris Jayaraj
Cinematography R. Ganesh
Editing by Don Max
Release date(s) expected : fall of 2009


Server : Mediafire

http://www.mediafire.com/?yzydyzmynzo

கவிதைகள்

இரவு

விடியும் வரை விழித்துக்கொண்டு
விடிந்தபின் தூங்கிக்கொண்டு இருக்கும்
இரவு.

- ராஜேஷ்
video songs

Movie : Kandhasamy (2009)


Music: Devi Sri Prasad

Cast: Vikram, Shriya, Raghuvaran, Vivek, Santhanam, Vinod Raj, Y G Mahendran, Arun Mathavan, Vinayak, Alex, Indrajith
Direction: Susi Ganesan
Production: Kalaipuli S Thanu

ஒரு-தமிழன்.blogspot.com : sardarji jokes

டாக்டரிடம் ஒரு சர்தார் வந்தார்.
சர்தார் : எனக்கு ஞாபக மறதி அதிகமாக உள்ளது.
டாக்டர் : எவ்வளவு நாளாக ஞாபக மறதி உள்ளது......???
சர்தார் : யாருக்கு ?.........

ஒரு-தமிழன்.blogspot.com : கவிதை

உன் பார்வை

பூமிதிப்பாதையில் பாதியில்
நின்று விட்டேன்.
உன் கண்களைப்பார்த்து.

-ராஜேஷ்

ஒரு-தமிழன்.blogspot.com : அங்கதம்

அங்கதம் :

உண்மையாக நாட்டில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி நகைச்சுவையுடன் எழுதும் ஒரு கலை. தமிழில் அங்கத நாவல்கள் மிகச்சிலவே வெளி வந்துள்ளன. அவற்றுள் மிகவும் குறிப்பிட தகுந்தது வேதபுரத்து வியாபாரிகள்.

இந்திரா பார்த்தசாரதியின் வேதபுரத்து வியாபாரிகள், தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த அங்கத நாவல். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தமிழகத்தில் நிலவிய அரசியல் சூழலை மையப்படுத்தி எழுதப்பட்ட படைப்பு என்றாலும் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் இது அமைந்துவிட்டது, வருத்தத்துக்குரிய தற்செயல்! இந்நாவலில் நாம் ரசித்துச் சிரிக்கக்கூடிய அத்தனை இடங்களுமே மறுவாசிப்பில் உறைவைத்து விடுபவை. நடப்பு அரசியலை இத்தனை உண்மையாக அணுகி, நேர்மையான விமரிசனப் பார்வையுடன் அலசி, வலிக்காத அங்கதத்துடன் வெளிப்படுத்தக்கூடிய படைப்பு வேறொன்று இல்லை.

இந்நாவல் 1997-ம் ஆண்டு பாரதிய பாஷா பரிஷத் விருது பெற்றது.'

Tuesday, August 18, 2009

ஒரு-தமிழன்.blogspot.com : சிபாரிசு! (ஒரு பக்கக் கதை)

என் மனைவி பொரித்து வைத்த அரிசி வற்றலை எடுத்து வாயில் போட்டுப் பார்த்தேன். சப்பென்று இருந்தது. வடாம், வற்றல் மட்டுமல்ல... என் நண்பர் ஆறுமுகம் அறிமுகப்படுத்திய கடைகளில் வாங்கிய பொருட்கள் எல்லாம் சுமார் ரகம்தான். இந்த லட்சணத்தில் நான் மற்றவர்களுக்கு சிபாரிசு செய்ய வேண்டுமாம்.



"போலீஸ் துறையில் வேலை பார்க்கும் ஆறுமுகம் எதற்காக இந்த கடைகளில் விற்கும் பொருட்களுக்கே சிபாரிசு செய்கிறார்? ஒரு வேளை வாராவாரம் போய் மாமூல் வாங்கிக் கொள்வாரோ?

""கோபால்! நான் சொன்ன கடைகளில் விற்கிற பொருட்கள் எல்லாம் ஜெயில்ல இருக்கிற கைதிகள் தயார் செஞ்சு அனுப்புறது. கைதிகள் திருந்தி வாழணும்னு ஜெயிலுக்குள்ளே கைத்தொழில் கத்துக்கொடுத்துட்டு, அப்புறம் அதை நாமளே உதாசீனப்படுத்தினா எந்த சுயநலமும் இல்லைப்பா. கூடிய சீக்கிரம் அவங்களும் தரமா தயாரிப்பாங்க!'' - சிறைக்காவலாளியாகப் பணிபுரியும் என் நண்பர் ஆறுமுகம் என்னிடம் சொல்ல, ஆறுமுகம் அறிமுகப்படுத்திய கடைகளிலேயே தொடர்ந்து பொருட்கள் வாங்க தீர்மானித்தேன்.


நன்றி : குமுதம், தினமலர்.com

ஒரு-தமிழன்.blogspot.com : ஒரு பக்கக் கதை - ஐடியா

வரிசையாக உள்ள பத்து வீடுகளுக்கு மத்தியில் உள்ளதுதான் மதுபாலன் வீடு. ஒரு நாள் நள்ளிரவில் அவரது வீட்டில் திருடன் புகுந்து கத்தியைக் காட்டி பீரோவைத் திறக்கச் சொல்லி மிரட்டவே, அவனை இடித்துக் தள்ளிவிட்டு வெளியே ஓடிவந்து கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு "" தீ ... தீ... ஓடிவாங்க!'' என்று சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து திருடனை மடக்கிப் பிடித்தனர்.



""திருடன்னு கத்த வேண்டியதுதானே!'' என்று மதுபாலனின் மனைவி கேட்கவே, ""திருடன்னு சத்தம் போட்டா யாருமே பயந்துகிட்டு வெளியே வரமாட்டாங்க. ஆனா "தீ... தீ...ன்னு' சத்தம் கேட்டவுடனே எங்க நம்ம வீட்டுக்கும் "தீ' பரவிவிடுமோன்னு பயத்துல எல்லாரும் ஓடிவந்திட்டாங்களே!'' என்று கூறிய கணவனின் சமயோசித புத்தியை நினைத்து பெருமைப்பட்டாள்.


நன்றி : குமுதம்,தினமலர்.com

வள்ளுவருக்கு மரியாதை!

இரண்டு வரிகளில் உலகை அளந்த வள்ளுவருக்கு உள்நாட்டில் 18 ஆண்டுகாலச் சிறைவாசம். 1991ம் ஆண்டு செப்டம்பர் மாதம், பெங்களூரு தமிழ்ச் சங்கத்தால் அல்சூர் ஏரிக் கரையில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை அப்போதைய கர்நாடக முதல்வர் பங்காரப்பா திறப்பதாக உறுதி அளித்தார். ஆனால் கன்னட புலிகேசி சங்கம் என்ற அமைப்பு திருவள்ளுவர் சிலையைத் திறக்கக்கூடாது என்று வழக்குப் போட்டது. நடிகர் ராஜகுமாரைக் கடத்தியபோது இதையும் தனது கோரிக்கையாக வைத்தான் சந்தன வீரப்பன். ராஜ்குமார் காட்டில் இருந்தபோது ஒப்புக் கொண்ட கன்னட அமைப்புகள், பின்னர் அவர் விடுவிக்கப்பட்டவுடன் அதைக் கைவிட்டன. காவிரிப் பிரச்னை ஒகேனக்கல் பிக்கல் பிடுங்கல் எழும்போதெல்லம் தமிழர்களோடு சேர்ந்து திருவள்ளுவரும் அடிவாங்கிக் கொண்டு இருந்தார்.





அந்தா இந்தா என ஒரு வழியாக திருவள்ளுவருக்கு விடுதலை கிட்டத்தட்ட கைக்கு எட்டும் நிலையில் ஆகஸ்ட் 9ம் தேதி தமிழக முதல்வர் பெங்களூரில் திருவள்ளுவர் தரிசனத்தைத் துவக்கிவைக்க, ஆகஸ்ட் 13ம் தேதி சென்னையில் கர்நாடக முதல்வர் முன்னிலையில் கன்னட அறிஞர் சர்வக்ஞரின் சிலை திறக்கப்படுகிறது.




பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மீனாட்சி சுந்தரத்துக்கு வார்த்தைகளில் அத்தனை மகிழ்ச்சி... நெகிழ்ச்சி. கிட்டத்தட்ட 18 ஆண்டுகால கனவு நிறைவேற இருக்கிறது. ஒரு வாரத்தில் சிலை செய்யுங்கள், உடனே திறப்பு விழா நடத்துவோம்! என்று 18 ஆண்டுகளுக்கு முன் பங்காரப்பா கூறியதும் தற்காலிக ஏற்பாடாக ஃபைபரில் திருவள்ளுவர் சிலை செய்தோம். அதுதான் இத்தனை ஆண்டுகளாக கோணிக்குள் அடைந்து கிடந்தது. இப்போது திறப்பு விழா காண இருப்பது 300 கிலோ எடையும் 5 அடி உயரமும் உள்ள வெண்கலச் சிலை. பிரபல சிற்பி மணி நாகப்பா வடித்த சிலைஅது என்றார்.




எல்லாம் சரி... யார் அந்த அறிஞர் சாவக்ஞர்! பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லூரியின் கன்னடத் துறை பேராசிரியர் டாக்டர் மேத்யூ சொல்கிறார்.... ""திராவிட மொழிகளின் மும்மூர்த்திகள் என திருவள்ளுவர் (தமிழ்) வேமண்ணா (தெலுங்கு). சர்வக்ஞர் (கன்னடம்) ஆகியோரைக் குறிப்பிடுவார்கள். சர்வக்ஞர் கி;பி.16ம் நூற்றாண்�ட் சேர்ந்தவர். இவர் எழுதிய நூலின் பெயர், "சர்வக்ஞர் உரைப்பா' தந்தை பசவரசன், தாய் மாலி. சர்வக்ஞர் என்ற சொல்லுக்கு அனைத்தும் அறிந்தவர் என்று பொருள். உலகம் எல்லாருக்கும் பொதுவானது. யாரும் எதற்காகவும் சொந்தம் கொண்டாட முடியாது என்ற கருத்தையே வலியுறுத்துகின்றன சர்வக்ஞரின் படைப்புகள்! என்கிறார் மேத்யூ. இதே அணுகுமுறையில் காவிரி, ஒகேனக்கல் பிரச்னைகளையும் தீர்த்தால் வள்ளுவரும் சர்வக்ஞரும் வாயாற வாழ்த்துவார்கள்!


நன்றி : தினமலர்.com

தமிழ் கவிதைகள்

வாழ்க்கை


கடவுளுடன் சீட்டாடுவது

கொஞ்சம் கடினமானது

எவ்வளவு கவனமாக இருந்தாலும்

பார்க்காமலே அறிந்துக்கொள்கிறார்



ஸ்தல புராணம்



பெருமாள் கோயில் பிராகாரமும்

பல்லக்குத் தூக்கிகளின் கோஷமும்

ஆயிரங்கால் மண்டபத்தின்

அமானுஷ்ய இருட்டும்கூட

காலத்தில் கரையாமல்

அப்படியே இருக்கின்றன நண்பா!

தன் தம்பியுடன் வந்து

நம் பார்வைகளுடன் திரும்பும்

காயத்ரியின்

கால் தடங்களில் மட்டும்

சிமென்ட் பூசியிருக்கிறார்கள்!



மரணம் பற்றிய வதந்தி



திருஷ்டி கழிந்தது என்றார்கள்

தீர்க்காயுசு என்றார்கள்

படபடத்தோம் என்றார்கள்

எப்போதோ எழுதிய

என் கவிதையைச் சொன்னேன்..



"இறந்துபோனதை



அறிந்த பிறகுதான்

இறக்க வேண்டும் நான்!



உயில்



மகன் பிறந்த பிறகுதான்



அப்பாவின் பாசத்தை

அறிந்துகொள்ள முடிந்தது



என் அன்பு மகனே



உன் மகன் பிறந்ததும்

என்னை நீ அறிவாய்!



குட்டி புத்தரின் கோபம்



"" இவர் பேரு புத்தர்

இன்னொரு பேரு ஆதவன்

அந்தப் பேரைத்தான்

உனக்கு வைத்திருக்கிறேன்!''


என்றேன் மகனிடம்.

கோபமாக சொன்னான்;

""அவர் பேரு புத்தர்

நான்தான் ஆதவன்!'



நெஞ்சொடு கிளத்தல்


சுடலையேகி வேகும் வரை

சூத்திரம் இதுதான் சுற்றுப் பார்

உடலைவிட்டு வெளியேறி

உன்னை நீயே உற்றுப் பார்!



உள்ளும் புறமும்



அப்பாவின் சாயலில் உள்ள



பெட்டிக் கடைக்காரரிடம்

சிகரெட் வாங்கும்போதெல்லாம்

விரல்கள் நடுங்கின்றன!



நில் கவனி செல்



மாநகரத்துச் சாலைகளுக்கு

அவ்வப்போது உயிர் கொடுக்கிறது

தொட்டியில் பூத்த

ரோஜாச் செடிகளுடன்

வந்து போகும் மாட்டு வண்டி!



முதல் காதல்

காற்றில் பறந்து

பறவை மறைந்த பிறகும்

கிளை தொடங்கிய



நடனம் முடியவில்லை!



- நா.முத்துக்குமார்



நன்றி : தினமலர்.com

நன்றி : ஆனந்த விகடன்

இந்தியாவுக்கு பாக்., தர வேண்டிய பாக்கி

சுதந்திரத்தின் போது, இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளாக பிரிந்தன. இரு நாடுகளுக்கு இடையிலான நிதி கணக்குகளும் பிரிக்கப்பட்டன. அப்போது இந்தியாவுக்கு பாகிஸ்தான் தர வேண்டிய பாக்கியாக 300 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.



1950 - 51ம் ஆண்டு பட்ஜெட்டில் இது கடன் பொறுப்புகள் கணக்கில் காட்டப்பட்டது. அதன்பின், இந்த தொகையை பாகிஸ்தான் திருப்பிக் கொடுக்கவில்லை. முதல் பட்ஜெட்டிலிருந்து தற்போது வரை இந்த கடன் தொடர்ந்து ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கடன் பொறுப்புகள் பிரிவில் நிலுவையில் உள்ளது.



கடந்த பட்ஜெட்டில் இந்தியாவின் மொத்த கடன் பொறுப்புத் தொகை 34 லட்சத்து 95 ஆயிரத்து 452 கோடி ரூபாய். அதில் பாகிஸ்தான் தர வேண்டிய 300 கோடி ரூபாய் என்பது, 0.008 சதவீதம்தான். ஆனால் அன்று 1951ல் பட்ஜெட்டில் இந்தியாவின் மொத்த கடன் பொறுப்பு 2 ஆயிரத்து 865 கோடி ரூபாய். இதில் பாகிஸ்தான் கடன் ஏறத்தாழ 10 சதவீதத்துக்கும் அதிகம். தற்போது பணத்தின் மதிப்புக்கேற்ப கணக்கிட்டால் அதன் மொத்த மதிப்பு சில ஆயிரம் கோடிகளை எட்டும். இந்த கடனுக்கு இதுவரை இந்தியா வட்டி ஏதும் கணக்கிடவில்லை. 1947ல் சுதந்திரம் அடைந்தவுடன், இந்தியா பாகிஸ்தானுக்குத் தரவேண்டிய 50 கோடி ரூபாயை உடனடியாக பாகிஸ்தானுக்கு கொடுத்துவிட்டது.

நன்றி : தினமலர்.com

பாரதியார் கவிதைகள்

Books (Zipped PDF Format)

திருக்குறள் - Full Thirukural Book
பாரதி கவிதை -1- பாரதியார் கவிதைகள் : Part-1
பாரதி கவிதை -2- பாரதியார் கவிதைகள் : Part-2
தண்ணீர் தேசம் - வைரமுத்து கவிதை
மனசே ரிலாக்ஸ் -2- சுவாமி சுகபோதானந்தா


For free tamil jokes, kavithai, sardar jokes, kadi jokes, kadi sms (all in tamil) please click
Oru tamilan blog

Monday, August 17, 2009

பன்றிக் காய்ச்சல்: புரிதல் - அணுகுமுறை

டாக்டர் எம்.எம். ஸலாஹுத்தீன்


பன்றிக் காய்ச்சல், உலக சுகாதார மையத்தால் கண்டங்களைத் தாண்டிப் பரவும் கொள்ளை நோயாக (டஹய்க்ங்ம்ண்ஸ்ரீ) ஜூன் 11-ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆயினும், ஆகஸ்ட் 3-ம் தேதி புனேயில் பன்றிக் காய்ச்சலால் விளைந்த முதல் மரணம் பதிவு செய்யப்பட்ட பின்புதான் இந்தியா பெரும் பரபரப்போடு விழித்துக் கொண்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த இருபத்தாறுக்கும் மேற்பட்ட பன்றிக் காய்ச்சல் மரணங்கள் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன. ஓரிரு ஆண்டுகளில் உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்களைப் பாதிக்கச் சாத்தியமுள்ள கொள்ளை நோயாக பன்றிக் காய்ச்சல் உருவெடுத்துள்ளது என உலக சுகாதார மைய நிபுணர்கள் கருதுகின்றனர்.

கடந்த நூறு ஆண்டுகளில் பன்றிக் காய்ச்சல் இத்தகைய கொள்ளை நோயாகப் பரிமாணம் கொள்வது இது நான்காவது முறையாகும். ஆயினும், இந்தத் தடவை பன்றிக் காய்ச்சலின் வீரியம், இதுவரை "மிதமானதாக' இருக்கிறது என ஒப்புக்கொள்ளும் நிபுணர்கள், அதன் வீரியமும் வேகமும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதையும் எடுத்துரைக்கின்றனர். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளுக்கே பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோய் பெரும் சவாலாகத் திகழும்போது, இந்தியா போன்ற ஒருங்கிணைந்த வளர்ச்சியடையாத நாடுகளுக்கு பன்றிக் காய்ச்சல் இன்னும் பெரிய சவாலாக விளங்கும் என்பதில் ஐயமேதும் இல்லை. இக்கொள்ளை நோய் குறித்த ஆழமான புரிதலும், அரசும் குடிமக்களும் சேர்ந்து மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுமே இதன் தாக்கத்தை மட்டுப்படுத்தும் என்பதை நாம் அடிப்படையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

1918-ம் ஆண்டு விஷக்காய்ச்சல் முதன்முதலாக கொள்ளை நோயாக உருவெடுத்தபோது, அதற்குக் காரணமான ஏ1ச1 இன்ஃபுளுயன்சா வைரஸôல் பன்றிகளும் பெருவாரியாகப் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு மற்ற விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களைப் போலவே இருமல், சளி, தொண்டை வலி, தலைவலி, உடல்வலி மற்றும் காய்ச்சல் ஆகிய நோய்க்குறிகள் காணப்படும். இவ்வகை பன்றிக் காய்ச்சல், "மூச்சுத் திணறலோடு கூடிய விஷக்காய்ச்சல்' எனப் பரவலாக அறியப்பட்டிருந்தாலும், முந்தைய வகைகளிலிருந்து சில அடிப்படையான அம்சங்களில் மாறுபடுகிறது. காய்ச்சல் ஒரு நோய்க்குறியாக பலரிடம் காணப்படுவதில்லை. அதேவேளை, பேதி ஒரு முக்கிய நோய்க்குறியாகப் பலரிடம் காணப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளானவர்களில் பெரும்பாலோர், சாதாரண விஷக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களைப் போன்றே இரண்டு அல்லது மூன்று நாள்களில் குணமடைந்து விடுகின்றனர். ஆனால், குறிப்பிட்ட ஒருசிலர், சில மணித்துளிகளிலிருந்து சில நாள்களுக்குள் நோயின் தீவிரமான தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். நோய் தீவிரமடையும்போது, சுவாச உறுப்புகளுக்குள் நீர்கோர்த்துக் கொள்வதால், மூச்சுத்திணறல் உண்டாவதைத் தொடர்ந்து சிறுநீரகம், இதயம், மூளை முதலிய முக்கிய அவயங்கள் செயலிழப்பதால் மரணம் உண்டாகிறது. இத்தகைய தீவிரத் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடியவர் இரண்டு வயதிற்குட்பட்ட சிறார்களாகவோ அல்லது அறுபது வயதைக் கடந்த முதியவர்களாகவோ இருக்கின்றனர்.

இது மட்டுமன்றி ஆஸ்த்மா முதலான சுவாச மண்டல நோய்கள், ஹெச்ஐவி மற்றும் நீரிழிவு நோய் முதலான நோய் எதிர்ப்பைக் குறைக்கும் நோய்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களும், உடல் பருமன் கொண்டவர்களும், கருவுற்றிருக்கும் பெண்களும் பன்றிக் காய்ச்சலின் தீவிரத் தாக்குதலுக்கு உள்ளாக சாத்தியமுள்ளவர்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர். பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோயைப் பரவாமல் தடுக்கவும் அதன் தாக்கத்தைத் தணிக்கவும் நோய் குறித்த நடைமுறை ரீதியிலான புரிதலும், ஒருங்கிணைந்த அணுகுமுறையும் அவசியம். அமெரிக்க அனுபவத்தையும் உலக சுகாதார மைய அறிக்கைகளையும் அலசிப் பார்க்கும்போது பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோய் ஒருசில நாள்களிலோ அல்லது ஓரிரு வாரங்களிலோ தீர்ந்துவிடக்கூடிய பிரச்னையில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்நோய் தட்பவெப்ப சூழலுக்கேற்ப அலை அலையாக ஓரிரு ஆண்டுகளாகத் தொடர்ந்து தாக்க வாய்ப்பிருக்கிறது என்பதை அமெரிக்க அனுபவம் சுட்டிக்காட்டுகிறது. நியூயார்க் மாநகரத்தில் இரண்டாம் அலை பன்றிக் காய்ச்சல் தொடங்கியிருப்பதாக மாநகர அதிகாரிகள் கருதுகின்றனர். தனி மனிதர்கள் மற்றும் குடும்பங்களைப் பொருத்தவரை, வெறுமனே பீதியடைவதும் வதந்திகளைப் பரப்புவதும், அன்றாடப் பணிகளைத் தவிர்த்துக்கொள்ள விளைவதும் நடைமுறை ரீதியான பலன் எதனையும் தரப்போவதில்லை. தனிமனிதர்களும் குடும்பங்களும் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். நோயின் இயல்பையும், அதன் தாக்கத்தின் தீவிரத்தையும் மக்கள் அறிவுபூர்வமாக விளங்கிக் கொள்ள முன்வருவதோடு, ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கைக்கொள்ளவும் முன்வர வேண்டும். கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றுவது நோயின் தாக்கத்தைப் பெருமளவு தணிக்க உதவும்.

வீடுகளைக் காற்றோட்டமும் வெளிச்சமும் புகக்கூடிய விதத்தில் வைத்துக் கொள்வது; சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வது;

ஆரோக்கியமான உணவை உட்கொள்வது; நிறைய நீர் பருகுவது; காய்ச்சல் மற்றும் சளி ஏற்பட்டால் சளியைத் துடைக்கும் கைக்குட்டைகள் போன்றவற்றைத் தனியாக, கவனமாக அப்புறப்படுத்துவது;

மூன்றடுக்குப் பாதுகாப்பு முகமூடியை நோயுற்றவரும், தேவைப்பட்டால் வீட்டிலுள்ள மற்றவர்களும் அணிந்து கொள்வது;

கைகளை சோப் அல்லது ஆல்கஹால் கலந்த கலவையால் அடிக்கடி கழுவிக் கொள்வது; நோய்க்குறி உள்ளவர்களிடமிருந்து முடிந்தவரை விலகியிருந்து அவருக்குப் பணிவிடை செய்வது.

நோய்க்குறி உள்ளவர்கள் பன்றிக் காய்ச்சல் வந்தவருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தாலோ அல்லது பன்றிக் காய்ச்சல் உள்ள பகுதிக்குச் சென்று வந்திருந்தாலோ அல்லது நோயின் தீவிரத்தன்மை அதிகரிக்க வாய்ப்புள்ள குறிப்பிட்ட வயது, நோய் அல்லது உடலியல்பு இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டவராக இருந்தாலோ கட்டாயமாக A1H1 வைரஸ் இருக்கிறதா என மருத்துவரின் ஆலோசனையோடு பரிசோதனை செய்து கொண்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ""மக்கள் அதிகமாக கூடக்கூடிய மருத்துவமனை, பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் பணிபுரிவோர் நிறுவனங்களில் பணியாற்றுவோரில் யாருக்கேனும் நோய்க்குறிகள் இருந்தால் அவர்களும் பாதுகாப்பு முகமூடி அணிந்து கொள்ள வேண்டும். மற்றபடி வீதிகளில் வருவோர் போவோர் எல்லாம் முகமூடி அணிந்து கொள்வது பொதுவான அச்சத்தையும், குழப்பத்தையும் உண்டாக்குவதைத் தவிர வேறெந்தப் பலனையும் தராது''. மற்றொன்று, பள்ளிக்கூடங்கள். பள்ளிக்கூடங்களை மூடுவது எந்தப் பிரச்னைக்கும் தீர்வு ஆகாது.

அதுமட்டுமன்றி, காலவரையின்றி பள்ளிக்கூடங்களை மூடுவதும் நடைமுறை சாத்தியமில்லாதது. ஒருசில பாதுகாப்பு முன்னேற்பாடுகளோடு தடையேதுமின்றி பள்ளிக்கூடங்களை நடத்தலாம். நோய்க்குறி உள்ளவர்கள் நோய் தீரும் வரை பள்ளிக்கூடத்துக்கு வரக்கூடாது என அறிவுறுத்த வேண்டும். பள்ளியில் யாருக்கேனும் நோய்க்குறிகள் தோன்றினால் அவர்களுக்குப் பாதுகாப்பு முகமூடி அணிவித்து, தனித்த அறையில் தங்கச் செய்து வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும். இதுகுறித்த தெளிவான வழிகாட்டுதலை அரசாங்கம் வழங்க வேண்டும். பன்றிக் காய்ச்சல் நோயைக் கண்டறிவதில் தாமதம் காட்டிய மருத்துவர் மற்றும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுப்போம் என்ற ரீதியிலான குறுகிய மேலோட்டமான அணுகுமுறை நோயின் தன்மைகளையும், பிரச்னையின் பரிமாணத்தையும் மத்திய அரசாங்கம் புரிந்துகொள்ளவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை முதல்வர் தலைமையிலான பன்றிக் காய்ச்சல் குறித்த ஆய்வுக் கூட்டம் நல்ல தொடக்கம் என்பதில் சந்தேகமில்லை. நோய் இருப்பதாகச் சந்தேகப்படுபவர்களை பரிசீலனை செய்வதற்கான மருத்துவ மையங்களையும், தரமான பரிசோதனைக் கூடங்களையும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒருங்கிணைப்போடு பரவலாக ஏற்பாடு செய்ய வேண்டும். ஏனெனில் ஓரிரு மையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினால், அதுவே நோய் பரவுவதற்கு வழிவகை செய்ததாகிவிடும். பன்றிக் காய்ச்சல் நோயில் பாதிக்கப்பட்டவர்கள் என பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டவர்களை தக்க முன்னேற்பாடுகளுடன் வீடுகளிலேயே சிகிச்சை செய்யவும், தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளவர்கள் ஆகியோரை சிறப்பு மையங்களில் சேர்த்து சிகிச்சை செய்யத் தேவையான வழிகாட்டுதலையும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தகுந்த ஏற்பாட்டையும் செய்ய வேண்டும். நோயின் தீவிரத்தை மட்டுப்படுத்த உதவுவதாகக் கருதப்படும் டாமிஃபுளூ வைரஸ் கொல்லி மருந்தை மாவட்ட அளவில் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்வதோடு, அதைப் பயன்படுத்துவதற்கான சரியான வழிகாட்டுதலையும் வழங்க வேண்டும். பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோய் வைரஸôன புதியவகை ஏ1ச1 வைரஸýக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் முயற்சிக்கு இந்திய அரசாங்கம் தீவிரமான பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதும் முக்கியமானதாகும். கடைசியாக, எல்லா தரப்பினருக்கும் இத்தகைய கொள்ளை நோய்கள் எடுத்துவைக்கும் தெளிவான செய்தி ஒன்று உண்டு. ஒருவர் கழுத்தில் ஒருவர் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும் போட்டி உலகில், பணம் மனிதனை வழிநடத்திச் செல்லும் பரபரப்பான வாழ்வில், வாசலில் மரணம் வந்து தட்டக்கூடும் என்ற உணர்வு, நின்று நிதானமாக தன் வாழ்வின் நோக்கையும், போக்கையும் மறு பரிசீலனை செய்ய மனிதனுக்கு தரப்பட்ட ஒரு வாய்ப்பு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.





நன்றி : தினமணி

நெஞ்சையள்ளும் தஞ்சை ஓவியங்கள்!

ஆதிமனிதன் பேசத்துவங்கும் முன் அதற்காக செய்த ஆரம்ப கட்ட முயற்சி உரத்து குரல் எழுப்பியது தான். அதைப்போல் எழுதுவதற்காக செய்த முதல் முயற்சிகளில் அவன் சித்திர ரூபங்களிலே தான் எழுத்துக்கள் எழுத துவங்கினான். அவை சித்திர எழுத்துக்கள் எனப்பட்டன. மொழி உருவாவதற்கு முன்பே சித்திர எழுத்துக்கள் உருவாகிவிட்டன.



எண்ணங்களின் வெளிப்பாடு காலப்போக்கில் பேச்சும் எழுத்தும்என்று பரிணமித்தன. பேசும் மொழியும் எழுதும் எழுத்தும் இடம் காலம் வேறுபாடுகளால் மாறுபாடு கொண்டிருந்தாலும் சித்தரங்களில் ஒரு பொதுமைத்துவம் பொலிந்ததுண்டு. ஆயினும் எல்லாவித கலைகளைப்போல அவற்றுக்கும் வகைகளில் வித்தியாசங்கள் இருந்தன.


சுமார் நானூறு ஆண்டுகளுக்குள் உளுவாகியதே தஞ்சாவூர் ஓவியங்கள். மராட்டிய மன்னர்களின் சாம்ராஜ்யம் தஞ்சாவூர் வரை வரவியிருந்த காலக்கட்டத்தில், அவர்களது பிரதிநிதியாக சரபோஜி மன்னரின் ஆட்சியில் படைக்கப்பட்டு வளர்ந்த ஓவியக்கலை தஞ்சாவூர் ஓவியம் எனப்படலானது.


மராட்டியமும் தமிழும் கலந்த பண்பாட்டு உணர்வில் உருவாக்கப்பட்டவை. இவை கோயில்கள், அரண்மனைகள், ஜமீன்கள் மற்றும் செல்வந்தர்களின் வீடுகளில் மட்டமே பெரிதும் காட்சியளித்தன. இயந்திரமயமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் தென்னிந்திய தொன்மைக்கலைகளை பாதுகாக்கும் அமைப்பு (Rejuventationg the Anvient Arts Of South Indian Art Foundation - RAASI) தஞ்சாவூர் ஓவியங்கள் மட்டுமின்றி வேறுபல கலையம்சங்களையும் பாதுகாத்து வளர்த்துவருகிறது.


நன்றி : மஞ்சரி, தினமலர்

அண்ணன் : ஒரு பக்கக் கதை

தங்கை கோமதியன் கழுத்தில் தாலியேறியதைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் விட்ட தாமோதரனுக்கு மாப்பிள்ளைவீட்டார் சிலரின் பாராட்டுதான் புரியவில்லை.

வீட்டை அடமானம் வெச்சாவது தங்கச்சி கல்யாணத்தை நடத்தணும்னு நினைக்கற அண்ணன் கிடைக்க கோமதி குடுத்து வைச்சிருக்கணும்.

தாமோதரன் குழம்பிப் போனான்.

பத்து வருடம் வாயைக் கட்டி வயிற்றைக்கட்டி சம்பாதித்த காசைக் கொண்டுதானே கல்யாணத்தை முடிச்சிருக்கிறேன். இவர்கள் ஏன் இப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கோமதி வந்துதான் குழப்பத்தைத் தீர்த்தாள்.

அண்ணா நான் போற இடம் எப்படியோ தெரியாது. ஒரு வேளை பேராசைக்காரர்களா இருந்து இப்ப இருக்கிற வீ உங்கப்பா சம்பாதிச்சதுதானே? அதில் உன் பங்கை வாங்கி வான்னு சொல்லிட்டாகன்னா என்ன பண்றது?! அதனால்தான் இப்பவே... அந்த வீட்டு மேல நாலு லட்சம் கடன் வாங்கித்தான் எங்கண்ணன் இந்தக் கல்யாணத்தை நடத்துதுன்னு ஒரு பொய்யை மாப்பிள்ளை வீட்டுப்பக்கம் பரப்பிவிட்டேன். இனி அவங்க நம்ம வீட்டைப் பத்தி நினைக்கமாட்டாங்க... என்றாள் கோமதி.



நன்றி : குமுதம் , தினமலர்

கல்யாணம்: ஒரு பக்கக் கதை

என்ன அநியாயம்மா, நான் வசதி படைச்சவன்னு தெரிஞ்சதும் முப்பது பவுன் நகை போடணும். வரதட்சணையா இருபதாயிரம் ரூபாய் கொடுக்கணும். பட்டுப் புடவை பத்துப் பதினைந்து வாங்கணும். அப்படி இப்படின்னு இன்னொரு கல்யாணம் நடக்க எவ்வளவு பணம் தேவையோ, அந்த அளவுக்கு நாக்கூசாம கேக்கறி�ங்களேம்மா என்றார் ஏகாம்பரம் தம் மகள் மல்லிகாவிடம்.

செஞ்சுடுங்கப்பா! என்றாள் மல்லிகா

என்னம்மா சொல்றே?

ஏதோ ஒரு காரணத்தாலே எனக்கு கல்யாணம் நடக்காமலே இருந்ததில்லே? அப்போ நீங்க சுவாமிக்கிட்டே என்ன வேண்டிகிட்டீங்க? எனக்கு கல்யாணம் நடந்தா சில ஏழைப் பெண்களுக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன்னு வேண்டிக்கிட்டீங்க... இல்லையாப்பா?

ஆமாம்!

சில ஏழைப் பெண்களுக்கு நீங்க கல்யாணம் செய்துவைக்க வேண்டாம்பா... ஒரு பெண்ணுக்கு கல்யாணமாக உதவி செய்யுங்கப்பா போதும்... பிள்ளை வீட்டிலே கல்யாண வயசுல ஒரு பெண் இருக்காப்பா... அவளுக்கு “கல்யாணம் செய்து வைக்கப் பணமில்லை. பிள்ளைக்கு கல்யாணம் செஞ்சு வச்சா அதன்மூலமா பெண்ணுக்கு கல்யாணம் ய்துலாமேன்னு நெனைச்சு கேக்குறாங்கப்பா!

செஞ்சுடறேன்ம்மா! என்றார் ஏகாம்பரம்.

- சுகந்தி


நன்றி : குமுதம், தினமலர்

மூன்று எரிச்சல்கள்

என் ரத்தக் கொதிப்பை ஒவ்வொரு வேளையும் அதிகரிப்பதற்கான நிகழ்ச்சிகள் எப்போதும் நடந்துகொண்டே இருக்கின்றன

. டி.வி.பார்க்காமல், செய்தித்தாள் படிக்காமல், வீட்டுக்குள் ஏ.சி. அறையில் முடங்கி, வெளியே சென்றால் ஏ.சி. காரில் பயணித்து, .சி. அலுவலாத்தில் அமர்ந்து வாழ்க்கை நடத்தினால் மட்டுமே இந்த ரத்தக் கொதிப்பிலிருந்து தப்பிக்க முடியும். பல அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் இப்படி வாழ்க்கை நடத்தித்தான் சுரணை கெட்டுக் கிடக்கிறார்களோ என்று தோன்றுகிறது


எரிச்சல் 1:

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் சமபளம் 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இது தவிர கார் அலவன்ஸ் மட்டும் 20 ஆயிரம் ருபாய். இன்னும் பல சலுகைகள் அவர்களுக்கு உண்டு. தொகுதி மேம்பாட்டு நிதி வேறு ஒரு கோடி 50 லட்சத்திலிருந்து ஒரு கோடி 70 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது

.இந்த அளவு வாங்கும் சம்பளத்துக்கு அவர்கள் என்ன வேலை பார்த்தார்கள் என்று கணக்கிட்டால் எரிச்சல்தான் வருகிறது

. ஒரே நாளில் 30 சட்டங்களை நிறைவேற்றித் தள்ளுகிறார்கள். அந்தக் களைப்பு தீர அரசு செலவில் முதலமைச்சரால், 46 ஐட்டங்களுடன் தாஜ் கோரமாண்டல் நட்சத்திர ஓட்டலில் விருந்து வேறு வைக்கப்படுகிறது. (ஒரு சாப்பாட்டின் விலை சுமார் ஆயிரம் ரூபாய் என்கிறார்கள்)

ஐந்து வருடத்துக்குப் பிறகு மறுபடியும் எம்.எல்.ஏ ஆவாரா மாட்டாரா என்று நிச்சயமில்லாத ஒரு பதவியை வகிக்கும் இவர்களுக்கு சென்னை நகரில் அரசின் மலிவு விலையில் ஆளுக்கு இரண்டரை கிரவுண்டு வீட்டு மனை வேறு வேண்டுமாம். காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரன் இந்த கோரிக்கையை வைத்ததும் முதல்வர் இன்னும் நூறு எம்.எல்.ஏக்களின் கையெழுத்துடன் கோரிக்கை மனு கொடுங்கள் என்கிறார். அடுத்த 30 நிமிடங்களில் 105 எம்.எல்.ஏக்களின் கையெழுத்துடன் மனு வந்துவிடுகிறது ! அட உலக மகா உத்தமர்களே ... உங்கள் சட்டமன்ற வாழ்க்கையில் எந்த மக்கள் பிரச்சினைக்காவது இப்படி 30 நிமிடத்துக்குள் நூறு பேர் ஒன்று சேர்ந்ததுண்டா ?

சென்னை வரும்போதெல்லாம் எம்.எல்.ஏக்கள் தங்குவதற்கு கிரானைட்டும் டைல்சும் போட்டு இழைத்த ஹாஸ்டல் என்ற பெயரிலான அபார்ட்மெண்ட்டுகள் இருகின்றன. பலவற்றில் தொகுதியிலிருந்து வருகிற யார் யாரோ தங்குகிறார்கள். இது தவிர சென்னையில் வீட்டு மனைவேறு வேண்டுமாம். ஐந்தாண்டுக்கு ஒரு முறை243 எம்.எல்.ஏக்களுக்கும் சென்னையில் வீட்டு மனை ஒதுக்கிக் கொண்டே வந்தால் ஐந்தே வருடங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மனைகளை ஒதுக்க வேண்டும். கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய்க் கரையோரங்களில் குடிசைகளில் வசித்துக் கொண்டிருந்த உழைக்கும் உதிரித்தொழிலாளர்களை காலி செய்து சென்னைக்கு வெளியே துரத்துவதைப் பற்றி சட்டசபையில் கேள்வி கேட்டு அவையையே நிலைகுலைய செய்த சரித்திரமே இல்லை. தான் ரியல் எஸ்டேட் தாதா ஆவதற்காக 30 நிமிடத்தில் கையெழுத்து போட்டு குவிக்கிறார்கள். உருப்படுமா இந்த தேசம் ? உருப்படுமா அரசியல் ?

எரிச்சல் 2:

சுமார் ஒரு கோடி ருபாய் செலவில் சென்னையில் கே.கே. நகர் என்று அழைக்கப்படும் கலைஞர் கருணாநிதி நகரில் இருக்கும் ஒரு பூங்கா புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. கே.கே. நகர் என்ற அராஜகமான பெயரைப் போல எம்.கே.பி நகர் என்று ஒரு நகரும் சென்னையில் அழைக்கப்படுகிரது. மகா கவி பாரதி நகரின் சுருக்கமாம். இந்தப் பெயர்களை எல்லாம் கலைஞர் நகர், பாரதி நகர் என்று எளிமையாக வைத்திருந்தால் இந்த சுருக்க அராஜகம் நிகழ்ந்திராது.

கலைஞர் நகர் பூங்காவையும் இன்னும் பல புதுப்பிக்கப்பட்ட பூங்காக்களையும் அசல் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த வாரம் திறந்துவைத்தார்.

இந்தப் பூங்காவுக்கு சிவன் பூங்கா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. கலைஞர் நகர் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் உருவானபோது இந்தப் பூங்காவின் பெயர் ஜீவா பூங்கா. பொது உடமை இயக்கத்தலைவரும் சுயமரியாதை இயக்க முன்னோடியுமான அதே ஜீவாதான்.

கலைஞர் நகர் உருவாக்கப்பட்டபோது எல்லா தெருக்களுக்கும் நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கத்தலைவர்கள் பெயர்களை சூட்டுவதென்று திட்டமிட்டு சூட்டப்பட்டன. லட்சுமணசாமி, ராமசாமி, அழகிரிசாமி, முனுசாமி, ராஜமன்னார், பி.டி.ராஜன், ..பி. பாத்ரோ என்றெல்லாம் தெருப்பெயர்கள் சூட்டியபிறகு பூங்காவுக்கு ஜீவா பெயர் வைக்கப்பட்டது. இப்போது ஜீவா பூங்கா சிவன் பூங்காவாகிவிட்டது எப்படி ? சில வருடங்கள் முன்பு பூங்காவுக்குள் திடீரென்று ஒரு சிவன் சிலை முளைத்தது சிறு குன்று போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதில் சிவன் சிலை வைத்தது யார் என்பதை சென்னை மாநகராட்சிதான் விளக்க வேண்டும். பினர் பூங்காவை பொது மக்கள் சிவன் பூங்கா என்று சொல்ல ஆரம்பித்தார்கள். இப்போது புதுப்பித்தபின்னர், மாநகராட்சியே சிவன் பூங்கா என்று உலோக எழுத்துக்களை பதித்துவிட்டது. அதை ஸ்டாலின் திறந்துவைத்திருகிறார். பொதுப் பூங்காவுக்குள் சிவன் சிலை எப்படி வந்தது ? எப்போது வந்தது ? யார் வைத்தார்கள் ? இதே போல ஒவ்வொரு பொதுப் பூங்காவிலும் வெவ்வேறு மத அடையாளங்களை சாமர்த்தியமாக கொண்டு வந்து நுழைத்தால், அதை மாநகராட்சி ஏற்று அங்கீகரித்துவிடுமா ?

ஒரு கோடி ரூபாய் செலவில் கலைஞர் நகரின் பூங்காவைப் புதுப்பித்த அரசு நிர்வாகம் இந்த நகரின் ஒவ்வொரு சாலையும் தனியார் முதலாளிகளால் ஆக்ரமிக்கப்படுவதைக் கண்டு கொள்வதே இல்லை. எல்லா சாலைகளையும் வெவ்வேறு டிராவல்ஸ் கம்பெனிகள் கார் பார்க்கிங்காக ஆக்கிவைத்திருக்க்கின்றன. ஆர்.கே.சண்முகம் சாலையில் சரி பாதியை எண்ணேய் லாரிகளும் டிராவல்ஸ் வண்டிகளும் ஓட்டல் வாகனங்களும் ஆக்ரமிக்கின்றன. பி.டி.ராஜன் சாலையில் டெம்போ வாகனங்கள். லட்சுமணசமி சாலையில் ஒரு டிராவல்ஸ் கம்பெனி நடைபாதை மீதே கார்களை நிறுத்துகிறது. இன்னொரு ஷாமியானா கம்பெனி நடைபாதையை தன் வேன்களை நிறுத்தவும் நாற்காலி, கூடார கோடவுனாகவும் பயன்படுத்துகிறது. இது தவிர கோவில் ஆக்ரமிப்பு வேறு. இந்த வாகனங்களின் டிரைவர்களுக்கு கழிப்பிடங்களாக அருகில் உள்ள வீட்டுச் சுவர்கள் ஆக்கப்படுகின்றன. ஒரு குடியிருப்புப் பகுதி இப்படி சீரழிக்கப்படுவதை கேள்வி கேட்கக் கூட இங்கே ஆளில்லை. கலைஞர் நகரின் ஒவ்வொரு தெருவும் இப்படி முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதால், நடைபாதைகளில் நடக்கவே முடியாமல் என்னைப் போன்ற முதியவர்கள் பலர் திண்டாடுகிறோம்.

எம்.ஜி.ஆர்.நகர் மார்க்கெட் கலைஞர் நகர் சந்திக்கும் இடத்தில் நிரந்தர புதைகுழியாக சாலை பல வருடங்களாக இருக்கிறது. ராமசாமி சாலை, லட்சுமண சாமி சாலை, அழகிரிசாமி சாலை சந்திப்புகளில் திரும்பத் திரும்ப சாலைகள் தோண்டப்பட்டு புழுதி பரப்பும் மண் சாலைகளாக அவை நிரந்தரமாக ஆகிவிட்டன.

அரசு இயந்திரத்தின் அலட்சியத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக, முதலமைச்சர் பெயரில் இருக்கும் நகர் இருப்பது எவ்வளவு பொருத்தமானது ! உதயம் தியேட்டர் சந்திப்பருகே இருக்கும் ,கலைஞர் கருணாநிதி நகர் என்று நகரின் பெயரை அறிவிக்கும் பலகை கூட உடைந்து எழுத்துகள் காணாமல் போய் சிதிலமாகி, அரசின் பொறுப்பின்மைக்கு பொருத்தமான கல்வெட்டாக திகழ்கிறது !

தெருவில் நடக்கவே முடியாது . காரில் பூங்காவிற்குப் போய் அங்கே சுற்றி சுற்றி நடக்க எல்லா வசதிகளும் செய்யப்படும் என்பதுதான் சிங்காரச் சென்னையின் கொள்கை போலிருக்கிறது!

எரிச்சல் 3:

பீஹார் தலைநகரான பாட்னாவின் தெருக்களில் பட்டப்பகலில் ராகேஷ் எனபவனும் அவன் நண்பர்களும் சேர்ந்துகொண்டு ஒரு இருபது வயதுப் பெண்ணை நிர்வாணமாக்கி அடித்து உதைத்து உர்வலமாக அழைத்துச் சென்றதை ஒரு மணி நேரத்துக்கும் மேல் அருகிலிருந்து போலீஸ் வேடிக்கை பார்த்திருக்கிறது. பொது மக்களும் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். மீடியா, பத்திரிகையாளர்கள் படமெடுத்து நிகழ்ச்சியை செய்தியாக்கியிருக்கிறார்கள்

இப்படிப்பட்ட அராஜகங்களில் பத்திரிகையாளர்களோ மீடியா நிருபர்களோ தலையிட்டு தடுக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. அவர்களும் சேர்ந்து உதை வாங்குவார்கள். வெளியே தெரியாமலே போய்விடக் கூடிய ஓர் அராஜகத்தை உலகத்தின் பார்வைக்குக் கொண்டு செல்ல முயற்சிப்பதே அவர்கள் தொழிலின் நியாயமாகும்., ஆனால் பொது மக்கள் பெரும் திரளாக நினைத்தால் இப்படிப்பட்ட அராஜகங்களைத் தடுக்க முடியும். போலீஸ் தடுக்காமல் வேடிக்கை பார்த்துவிட்டு பின்னர் நடவடிக்கை எடுத்தது என்பது வெட்கக்கேடான விஷயம்.

அந்தப் பெண் ஒரு செக்ஸ் தொழிலாளி. ராகேஷ் எனபவ்ன் ஒரு விபசாரத் தரகன். அவளுக்கு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி அழைத்து வந்திருக்கிறான் என்றெல்லாம் போலீஸ் அதிகாரிகள் இப்போது சொல்கிறார்கள். ஒரு பெண் செக்ஸ் தொழிலாளி என்பதால் அவளை பொது இடத்தில் அடித்து உதைத்து நிர்வாணமாக்கும் உரிமை யாருக்கும் இல்லை. ஆனல் பொது மக்களுக்கு ரகசியமாக செக்ஸ் தொழில் தேவை. பகிரங்கமாக ஒழுக்க சீலர்கள் வேடமும் தேவை . இதுதான் இந்தியாவில் பீஹார் மட்டுமல்ல, எல்லா ஊர்களிலும் நம் பொது மக்களின் யோக்கியதை.

நெட்டை மரங்களென நின்று புலம்பினார் என்பான் பாஞ்சாலி சபதத்தில் பாரதி. பீஹாரில் வேடிக்கை பார்த்தவர்கள் புலம்பியதாகக் கூடத் தெரியவில்லை.

நம் சமுகத்தில் பொது மக்களுக்கு எதற்கெல்லாம் ஆத்திரம் வரும் ஆவேசம் வரும் என்ற அளவுகோல்கள் வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன. அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலின்போது ஒரு தொகுதியில் மக்களுக்கு கவரில் வெறும் ( !) 50 ரூபாய் தரப்பட்டதாம். வேட்பாளர் 250 ரூபாய் கொடுத்திருக்கிறார்; அதை விநியோகித்தவர்கள் ஏமாற்றிவிட்டாகள், என்று வெகுண்டெழுந்த பொதுமக்கள் ஆயிரகணக்கில் கூடி கட்சி தேர்தல் அலுவலகத்தை முற்றுகையிட்டிருக்கிறார்கள். வேட்பாளரே நேரில் வந்து இது எம்.எல்.ஏ தேர்தல் அல்ல; எம்.பி தேர்தல். இதை விட அதிகப் பணம் கொடுக்க இயலாது; தான் கொடுத்ததே 50 ரூபாய்தான் என்று பொதுமக்களிடம் பேசி சமாதானம் செய்தபின்னர் மக்கள் வருத்தத்துடன் கலைந்து போனார்களாம்.

இது நடந்தது தமிழகத்தில்தான்.

எங்கே போகிறோம் நாம் ?



நன்றி : ஞானி, ஞானி.நெட்

கோலம்

வீடு தேடி வரும் சினிமா இயக்கம்

கோலம் - ஏன் ? எதற்கு ? எப்படி ?

நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.

எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும் பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்ளும¢ இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறாரகள். இந்தப் புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள் முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும்.

ஊர் கூடி தேர் இழுப்போம்


For details gnani.net


அடுத்த கூகிள் ...........????

இணையத்தில் தேடுவோர் அனைவருக்கும் தெரிந்திருக்கும் பெயர் கூகுள். தேடு பொறிகளின் அரசன் அது. அதற்கு முன்னும் பின்னும் எத்தனையோ தேடுபொறிகள் வந்தாலும் அத்தனையும் தடமில்லாமல் அழிந்துவிட்டன. ஏதோ யாகூவும், மைக்ரோசாப்டும் மட்டும் கொஞ்சம் தாக்குப் பிடித்திருக்கின்றன. எனினும் அவற்றின் மொத்த வியாபாரம் வெறும் பத்து சதவீதம் மட்டும்தான். அப்படியானால் கூகுளின் ஏதேச்சாதிகாரத்தை ஒன்றுமே செய்ய முடியாதா? முடியவே முடியாது என்கிறார்கள் கூகுளின் நிர்வாகிகள். அதற்குக் காரணமும் இருக்கிறது. வலுவான முதலீடு, நல்ல கட்டமைப்பு, ரகசியம் காக்கும் திறன், அரசுகளையே ஆட்டிப் படைக்கும் தொழில்நுட்பம் ஆகியவைதான் கூகுளை நம்பர்1 ஆக வைத்திருக்கிறது.ஆனால் இந்த நம்பிக்கை கடந்த வாரம் கொஞ்சம் ஆட்டம் கண்டது. அதற்குக் காரணம் கூல் என்ற புதிய தேடுபொறியின் உதயம்தான். கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய அன்னா பேட்டர்சன், ரஸல் பவர் தம்பதிதான் இந்தத் தேடுபொறியை உருவாக்கினர்.

முகவரி www.cuil.com.

"கூல்' என்றால் அறிவு என்று அர்த்தமாம். தொடக்க நாளில் மீடியாக்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதுவரை வேறு எந்தத் தேடுபொறிக்கும் கிடைக்காத அளவுக்கு நல்ல விளம்பரம் கிடைத்தது.கூகுள் தேடுபொறியை விட 3 மடங்கு அதிகமான இணையப் பக்கங்களை உள்ளடக்கியது, பல மடங்கு வேகமாகத் தேடித் தருவது, தேடுவதை மட்டுமல்லாமல் அவை தொடர்பான மற்ற தகவல்களையும் தருவது என்பன போன்ற பல்வேறு சிறப்புகள் கூறப்பட்டன.

அப்படி என்னதான் விசேஷம் இருக்கிறது எனப் பார்ப்பதற்கு தளத்துக்குள் நுழைந்தால், நம் கண்ணில்படுவது மிக எளிமையாக கவர்ச்சிகரமான முதல்பக்கம். எந்த எளிமையால் கூகுள் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறதோ அந்த எளிமையை, அதைவிட அருமையாகப் பயன்படுத்தியிருக்கிறது கூல். கறுப்புப் பின்னணி, தேடும் சொற்களை உள்ளிடுவதற்கான பெட்டியின் நளினமான வடிவமைப்பு ஆகியவை முதல்பார்வையிலேயே நம்மைக் கவர்ந்துவிடும்.இவையெல்லாம் தேடுபொறிக்கு அவசியம்தான் என்றாலும், நமக்கு வேண்டிய தகவல்களை அள்ளித் தருவதைக் கொண்டுதான் அதன் தரத்தைத் தீர்மானிக்க முடியும். ஏதாவது சொற்களை உள்ளிட்டுக் கொண்டிருக்கும்போது அது தொடர்பான வேறு சொற்களின் பட்டியல் வருகிறது. அதிலிருந்துகூட ஏதாவது ஒரு சொல் அல்லது வாசகத்தை நாம் தேர்ந்தெடுக்க முடியும்.
தேவையான தகவலின் முக்கிய வார்த்தையை உள்ளிட்டதும், தகவல்கள் வந்து கொட்டுகின்றன.அங்கும் சில சிறப்புகளைச் செய்திருக்கிறது கூல். மற்ற தேடுபொறிகளைப் போல் வரிசையான பட்டியலாக இல்லாமல், பக்கவாட்டில் பத்திகளாக இணையப் பங்கங்கள் தரப்படுகின்றன. ஒவ்வொரு இணையப் பக்கத்துக்கும் அது தொடர்பான படம் ஒன்றும் அருகிலேயே இருக்கிறது. இது தவிர, வலது ஓரத்தில் இருக்கும் ஒரு பட்டியலில் நாம் தேடிய தகவல்களை ஒத்த மற்ற தகவல்களின் பட்டியலும் கிடைக்கிறது. கூகுளுடன் ஒப்பிட்டால் வேகம் கொஞ்சம் அதிகம்தான். முதல்நாளிலேயே, 5 கோடி பேர் கூல் தேடுபொறியைப் பயன்படுத்தியிருப்பதாக பேட்டர்சன் கூறுகிறார். மற்ற தேடுபொறிகளுக்குக் கிடைத்த வரவேற்பைக் காட்டிலும் இது மிக அதிகம். ஆயிரக்கணக்கான சர்வர்களை கூகுள் பயன்படுத்தி வரும் நிலையில், வெறும் 120 சர்வர்களைக் கொண்டு இத்தனை வசதிகளையும் வழங்கும் கூல் தேடுபொறியின் சாதனை வரவேற்கத் தகுந்ததே.ஆனால், கூல் தேடுபொறியைப் பயன்படுத்தியவர்கள் யாரும் அது கூகுளை விட சிறந்த தேடுபொறி என்றோ, சரியான போட்டியாக இருக்கும் என்றோ இதுவரை கூறவில்லை. கூல் தேடுபொறியில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் புதிய வசதிகளை வரவேற்கும் அதே நேரத்தில், பொருத்தமான தகவல்களைத் தேடித் தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. லட்சக்கணக்கான பக்கங்களைத் தேடித் தருவதைவிட பொருத்தமான சில பக்கங்களைத் தேடித் தருவதே பயனுள்ளதாக இருக்கும். இந்த விஷயத்தில் கூல் வெற்றிபெறவில்லை.அதேபோல், விக்கிபீடியா போன்ற முக்கிய இணைய தளங்களைக்கூட முதல்பக்கத்தில் காட்டுவதில்லை என்றும் பலர் கூறுகின்றனர். தேடித் தரும் இணைய தளங்களுக்கு அருகிலேயே அது தொடர்பான படங்கள் வருவது வசதியாக இருந்தாலும், அதில் சில ஆபாச படங்களாக இருப்பது முகம்சுளிக்க வைக்கிறது. கூல் நிறுவனத்தினர் கூறுவது போல் கூகுளைவிட அதிக இணையப் பக்கங்களை உள்ளடக்கியது எனக் கூறுவதையும் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது.மீடியாவால்தான் இத்தனை பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது என்று பலர் குறைகூறுகின்றனர். உண்மையில் நல்ல விஷயங்கள் நண்பர்கள் மூலமாகத்தான் நம்மை வந்தடைய வேண்டும், மீடியா வழியாக அல்ல. கோலியாத்தை தாவீது வீழ்த்தியது போன்று அதிசயம் எதுவும் நடந்தாலொழிய கூகுளுக்கு எந்த அச்சுறுத்தலும் இப்போதைக்கு இல்லை.

மேலும் இத்தளத்தினை பற்றி அறிய இங்கே சொடுக்கவும்
http://www.cuil.com/info/
நன்றி : தினமணி
நன்றி : http://makkakatradhu.blogspot.com

Joke

My wife dresses to kill. She cooks the same way.

Henny Youngman

-------------------------------------------------
My wife and I were happy for twenty years. Then
we met.

Rodney Dangerfield

-------------------------------------------------
A good wife always forgives her husband when
she's wrong.

Milton Berle


For unlimited jokes log on to Oru-Tamilan Blog

How to kill a lion

Cognizant Method:
hire a lion... ask him to stay for late nights but give him no work to do.
give him gobi 65 to eat again and again.
hire 100 more lions but do not increase the space to sit
give them same gobi 65 to eat
hire 200 more....... and more .......

TCS method:
hire a lion
give him hell a lot of work and pay him government salary
lion dies of hunger and frustration

IBM's metbod:
hire a lion, give him a pink slip in an hour ...
he dies of unemployment. ..

Syntel Method:-
Hire a Cat ...
assure him that he will eventually become a Lion once he reaches onsite and
make sure that he never reaches onsite.
Cat dies in hope of becoming a Lion....

MBT method:
hire the lion, make him take 14 tests and tell him that if he doesn't score 60% he will lose the job.
lion dies of the strain?

COSL Method:
hire a lion .
tell him to merge with Goats (polaris) and reduce his allowance...
lion dies from fear that tommorrow he might become a goat....

Polaris Method :
hire ..sorry....purchase a lion(COSL) ..
change his timings...(instead of 9 AM ...change it to 8:30 AM )
cut down his allowance (coupons etc)
lion dies from fear of becoming CAT.....

Patni method:
hire a lion, give him a salary of a cat...
the lion dies before joining....

Wipro Method:
Hire a Lion,
give him a mail Id.
he will die recieving stupid mails all day........! !!!

Accenture Method:
Hire a lion....
Send him to chennai
Ask him to stay on bench for a long time
Ask him to eat idli,Dosa and Vada
No hindi, kannada or no other languages speaking ppl other than TAMIL...
No good food, No water..and specially No Beautiful girls
And say him "Go Ahead be a Tiger".
Lion dies in confusion he is Tiger or lion......

HUAWEI Method:
Hire a Cat; give him a salary of a Lion...
Give him work of 3 Lions
Tell him to work late and even on weekends...
No time for food and family, automatically die….





THE LAST BUT NOT THE LEAST









INFOSYS METHOD:
HIRE A LION…..
SEND HIM FOR TRAINING IN MYSORE AND MAKE HIM FEEL LIKE
............ ......... ......... ............ ......... .......... .......KING OF THE JUNGLE!
MAKE HIM TAKE GENERIC COMPREE EXAM
………………………………..………………….LION TURNS INTO CAT
MAKE HIM TAKE STREAM COMPREE EXAM
…............ ......... ........ ............ ...……………...CAT TURNS INTO A MOUSE
SEND HIM INTO PRODUCTION WHICH HAS NOTHING TO DO WHAT HE LEARNED IN TRNG
……………………………………MOUSE RUNS HERE AND THERE FOR HELP!!!
SEND HIM MAILS TELLING ABOUT MANDATORY CERTIFICATIONS
............ ......... ......... ............ ......MOUSE COMMITS SUICIDE
Regards,
Corporate's

நட்புக்கு கூட கற்புகள் உண்டு ...... நல்லா தெரிஞ்சுக்கடா!



ஒன்பதரை மணி காலேஜிக்கு

ஒவ்வொருத்தனா கெளம்பும் போது

ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்

ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்…

அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ

அரை குறையா குளிச்சதுண்டு

பத்து நிமிஷ பந்தயத்துல

பட படன்னு சாப்டதுண்டு

பதட்டதோட சாப்பிட்டாலும்

பந்தயத்துல தோத்ததில்ல,

லேட்டா வர்ற நண்பனுக்கு

பார்சல் மட்டும் மறந்ததில்ல!

விறுவிறுன்னு நடந்து வந்து

காலேஜ் Gate நெருங்குறப்போ

‘வெறுப்படிக்கிதுடா மச்சான்’னு

ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா,

வேற எதுவும் யோசிக்காம

வேகவேகமா திரும்பிடுவோம்

வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க,

இல்ல ‘வெற்றி’ தியேட்டர்ல படம் பாக்க!

‘கஷ்டப்பட்டு’ காலேஜிக்கு போனா

கடங்கார professor கழுத்தறுப்பான்…

assignment எழுதாத பாவத்துக்கு

நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்!

கேலி கிண்டல் பஞ்சமில்ல,

கூத்து கும்மாள குறையுமில்ல,

எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா

H.O.Dய கூட விட்டதில்ல!

ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா

அத அடிப்பான் காபி அந்தபக்கம்…

ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து

ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!

பசியில யாரும் தவிச்சதில்ல

காரணம் – தவிக்க விட்டதில்ல…

டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்

சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல!

அம்மா ஆசையா போட்ட செயினும்

மாமா முறையா போட்ட மோதிரமும்

fees கட்ட முடியாத நண்பனுக்காக

அடகு கடை படியேற அழுததில்ல …

சட்டைய மாத்தி போட்டுக்குவோம்

சாதி சமயம் பாத்ததில்ல,

மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்

முகவரி என்னன்னு கேட்டதில்ல!

படிச்சாலும் படிக்கலன்னாலும்

பிரிச்சி வச்சி பாத்ததில்ல…

அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்

அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!

வேல தேடி அலையுறப்போ

வேதனைய பாத்துப்புட்டோம்

‘வெட்டி ஆபிஸர்’னு நெஜமாவே

மாறி மாறி சிரிச்சிகிட்டோம்!

ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு

ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ

மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல

கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்…

பக்குவமா இத கண்டும் காணாம

நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ

‘சாப்பாட்ல காரம்டா மச்சான்’னு

சமாளிச்சி எழுந்து போவோம்…

நாட்கள் நகர,

வருஷங்கள் ஓடுது,

எப்போதாவது மட்டுந்தான் இ-மெயிலும் வருகுது

“Hi da machan… how are you?” வுன்னு…

தங்கச்சி கல்யாணம்,

தம்பி காலேஜி,

அக்காவோட சீமந்தம்,

அம்மாவோட ஆஸ்த்துமா,

personal loan interest,

housing loan EMI,

share market சருக்கல்,

appraisal டென்ஷன்,

இந்த கொடுமையெல்லாம் பத்தாம

‘இன்னிக்காவது பேச மாட்டாளா?’ ன்னு

இஞ்சிமறப்பா போல ஒரு காதல்,

.

.

.

எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா,

நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா!

இ-மெயில் இருந்தாலும்

இண்டர்னெட் இருந்தாலும்

கம்பெனியில ஓசி phone இருந்தாலும்

கையில calling card இருந்தாலும்

நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல

நண்பனோட குரல கேக்க

நெனச்சாலும் முடியறதில்ல

பழையபடி வாழ்ந்து பாக்க!

கல்யாணத்துக்கு கூப்பிட்டு

வரமுடியாமா போனாலும்,

அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்

orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்

‘available’ ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்

‘ஏண்டா பேசல?’ ன்னு கோச்சிக்க தெரியல..

இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல!

தேசம் கடந்து போனாலும்

பாசம் மறந்து போகாது!

பேசக் கூட மறந்தாலும்

வாசம் மாறி போகாது!

வருஷம் பல கழிஞ்சாலும்

வரவேற்பு குறையாது!

வசதி வாய்ப்பு வந்தாலும்

‘மாமா’ ‘மச்சான்’ மாறாது!