அங்கதம் :
உண்மையாக நாட்டில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி நகைச்சுவையுடன் எழுதும் ஒரு கலை. தமிழில் அங்கத நாவல்கள் மிகச்சிலவே வெளி வந்துள்ளன. அவற்றுள் மிகவும் குறிப்பிட தகுந்தது வேதபுரத்து வியாபாரிகள்.
இந்திரா பார்த்தசாரதியின் வேதபுரத்து வியாபாரிகள், தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த அங்கத நாவல். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தமிழகத்தில் நிலவிய அரசியல் சூழலை மையப்படுத்தி எழுதப்பட்ட படைப்பு என்றாலும் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் இது அமைந்துவிட்டது, வருத்தத்துக்குரிய தற்செயல்! இந்நாவலில் நாம் ரசித்துச் சிரிக்கக்கூடிய அத்தனை இடங்களுமே மறுவாசிப்பில் உறைவைத்து விடுபவை. நடப்பு அரசியலை இத்தனை உண்மையாக அணுகி, நேர்மையான விமரிசனப் பார்வையுடன் அலசி, வலிக்காத அங்கதத்துடன் வெளிப்படுத்தக்கூடிய படைப்பு வேறொன்று இல்லை.
இந்நாவல் 1997-ம் ஆண்டு பாரதிய பாஷா பரிஷத் விருது பெற்றது.'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment