என்ன அநியாயம்மா, நான் வசதி படைச்சவன்னு தெரிஞ்சதும் முப்பது பவுன் நகை போடணும். வரதட்சணையா இருபதாயிரம் ரூபாய் கொடுக்கணும். பட்டுப் புடவை பத்துப் பதினைந்து வாங்கணும். அப்படி இப்படின்னு இன்னொரு கல்யாணம் நடக்க எவ்வளவு பணம் தேவையோ, அந்த அளவுக்கு நாக்கூசாம கேக்கறி�ங்களேம்மா என்றார் ஏகாம்பரம் தம் மகள் மல்லிகாவிடம்.
செஞ்சுடுங்கப்பா! என்றாள் மல்லிகா
என்னம்மா சொல்றே?
ஏதோ ஒரு காரணத்தாலே எனக்கு கல்யாணம் நடக்காமலே இருந்ததில்லே? அப்போ நீங்க சுவாமிக்கிட்டே என்ன வேண்டிகிட்டீங்க? எனக்கு கல்யாணம் நடந்தா சில ஏழைப் பெண்களுக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன்னு வேண்டிக்கிட்டீங்க... இல்லையாப்பா?
ஆமாம்!
சில ஏழைப் பெண்களுக்கு நீங்க கல்யாணம் செய்துவைக்க வேண்டாம்பா... ஒரு பெண்ணுக்கு கல்யாணமாக உதவி செய்யுங்கப்பா போதும்... பிள்ளை வீட்டிலே கல்யாண வயசுல ஒரு பெண் இருக்காப்பா... அவளுக்கு “கல்யாணம் செய்து வைக்கப் பணமில்லை. பிள்ளைக்கு கல்யாணம் செஞ்சு வச்சா அதன்மூலமா பெண்ணுக்கு கல்யாணம் ய்துலாமேன்னு நெனைச்சு கேக்குறாங்கப்பா!
செஞ்சுடறேன்ம்மா! என்றார் ஏகாம்பரம்.
- சுகந்தி
நன்றி : குமுதம், தினமலர்
No comments:
Post a Comment